×

கூலி பட பாடலை பாராட்டிய ஹாலிவுட் நடிகை -எந்த பாடல் தெரியுமா ?

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்துள்ள 'கூலி'. படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .இப்படத்தின் பாடல் குறித்து ஒரு சுவராஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது 
ரஜினி நடிப்பில் வெளியான கூலி  படம் வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலரை தாண்டி ப்ரீ புக்கிங்கில் வசூல் அள்ளியுள்ளது. இதன் மூலமாக எந்தப் படமும் செய்யாத சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது.
இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு நேர்காணலில், நடிகை பூஜா தான் நடித்த 'கூலி' திரைப்படத்தில் வரும் 'மோனிகா' பாடலை, பிரபல ஹாலிவுட் நடிகை மோனிகா பெலூச்சி (Monica Bellucci) பார்த்ததாகக் கேள்விப்பட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பூஜா கூறியதாவது: மொராக்கோவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் (Marrakech International Film Festival) தலைவர் மெலிடா டாஸ்கன், 'கூலி' படத்தின் 'மோனிகா' பாடலை மோனிகா பெலூச்சிக்குக் காண்பித்துள்ளார். அந்தப் பாடலை மோனிகா பெலூச்சி பார்த்து மிகவும் ரசித்ததாகத் தெரிவித்தார்.