×

ஹாட் ஸ்பாட் 2 படத்தின் புதிய அப்டேட்.. 
 

 

அடியே, திட்டம் இரண்டு படங்கள் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியவர் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹாட் ஸ்பாட் என்ற படத்தினை இயக்கினார் விக்னேஷ்.இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தில், கலையரசன், சாண்டி மாஸ்டர்,கௌரி கிஷன், ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகவுள்ளது. இந்த ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தையும் விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ளார். இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். தற்போது, இந்த படம்  குறித்து ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.அதில், இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஹாட் ஸ்பார் 2 படத்திற்கான புரோமா வீடியோவை நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வீடியோ தற்ப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஹாட் ஸ்பாட்  இரண்டாம் பாகம் எவ்வாறு இருக்கப்போகிறது என்று இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

<a href=https://youtube.com/embed/7nFqVmOzXjQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/7nFqVmOzXjQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">