×

மத்திய அரசு விருது பெற்ற ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் திரைப்படங்கள்!

நடிகர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய படங்கள் மத்திய அரசின் விருத்திற்காக தேர்வாகியுள்ளது. இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கி தயாரித்த ஒத்த செருப்பு படம் நல்ல விமர்சனங்களையும் ஏராளமான விருதுகளையும் குவித்தது. படம் முழுதும் பார்த்திபன் ஒருவர் மட்டுமே தோன்றுவார். இருந்தாலும் மக்களுக்கு சலிப்பு தட்டாத வகையில் நடிப்பு, திரைக்கதை மூலம் வெற்றிப் படமாக்கினார் பார்த்திபன். மேலும் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுகளுக்கு ஒத்த செருப்பு படத்தை
 

நடிகர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய படங்கள் மத்திய அரசின் விருத்திற்காக தேர்வாகியுள்ளது.


இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கி தயாரித்த ஒத்த செருப்பு படம் நல்ல விமர்சனங்களையும் ஏராளமான விருதுகளையும் குவித்தது. படம் முழுதும் பார்த்திபன் ஒருவர் மட்டுமே தோன்றுவார். இருந்தாலும் மக்களுக்கு சலிப்பு தட்டாத வகையில் நடிப்பு, திரைக்கதை மூலம் வெற்றிப் படமாக்கினார் பார்த்திபன். மேலும் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுகளுக்கு ஒத்த செருப்பு படத்தை அனுப்ப பல முயற்சிகள் செய்தார் பார்த்திபன். இந்தப் படம் ஆசியா புக் ஆப் ரெகார்ட்ஸ்-லும் இடம் பெற்றது.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் படமும் மக்களிடமிருந்து நல்ல விமர்சனங்களையும், விருதுகளையும் பெற்றது.

விருது அறிவிப்பு குறித்து பதிவிட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் “மாண்புமிகு பிரதமர் மற்றும் நடுவர் உறுப்பினர்கள், இந்த முயற்சிக்கு பின்னால் உள்ள அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. இது ஒரு சிறந்த நாள், நான் பெருமையாக உணர்கிறேன். என்னைப் போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இது பெரும் ஊக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாதிரி விருதுகள் மேலும் கருத்துள்ள படங்கள் எடுக்க என்னை ஊக்குவிக்கின்றன. இந்த விருது கிடைப்பதில் மகிழ்ச்சி என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ஹவுஸ் ஓனர் மற்றும் ஒத்த செருப்பு படங்களுக்கு தமிழ் மொழிக்கான விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.