×

‘ஊர் வாசம் + உறவுகளின் நேசம்’ - கார்த்தி, அரவிந்த் சாமியின் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர் எப்படி?

 

நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் மண் மணக்கும் சொந்த ஊர் வாசம் மற்றும் உறவுகளின் நேசமும் கதையாக சொல்லப்பட்டுள்ளது.

‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தினை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகிறது. இதில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

<a href=https://youtube.com/embed/Ahp840_aCoI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Ahp840_aCoI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. சுமார் 2.44 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த ட்ரெய்லரில் வாழ்வாதாரத்துக்காக சொந்த ஊர் மற்றும் உறவுகளை விட்டு வந்தவரின் பயணத்தின் ஊடாக கதை சொல்கிறார் இயக்குநர் பிரேம்குமார். ஊர் மற்றும் உறவுகளுடன் பல்வேறு பசுமையான நினைவுகள், தவிப்பு போன்றவை இதில் சொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அருள் எனும் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவரை ‘அத்தான்’ என அன்போடு அழைக்கிறார் கார்த்தி. குளக்கரையில் இருவரது பாதங்களை கடிக்கும் மீன் குஞ்சுகள், வெட்டவெளியில் இருவரும் இணைந்து பாடும் பாடல் என ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சில ஷாட்கள் அற்புதம்.