×

கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியின் ’ரெட்ரோ’ படம் எப்படி இருக்கிறது?

 

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. இந்தப் படத்தின் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ்ராஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஸ்டோன்பெஞ்ச் மற்றும் 2டி நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. இந்நிலையில் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சூர்யாவுக்கு நீண்ட நாட்களாக ஒரு கம்பேக் தேவைப்படும் நிலையில் இந்தப் படம் அதை கொடுத்துள்ளதா என்பது குறித்த ரசிகர்களின் கருத்தை பார்ப்போம்.


ரெட்ரோ படத்தின் முதல் 30 நிமிடங்கள் அட்டகாசமாக இருப்பதாகவும், கனிமா பாடல் காட்சி ரசிக்கும்படி இருப்பதாகவும் நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.