×

வேட்டையன்' சப்வே ஃபைட் படமாக்கப்பட்டது எப்படி? லைகா  வெளியிட்ட மாஸ் வீடியோ..!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அன்சீன் காட்சிகள் உட்பட சில வீடியோக்களை அவ்வப்போது லைக்கா நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.


அந்த வகையில், இந்த படத்தின் ஹைலைட்டான சப்வே பைட் சீன் படமாக்கப்பட்டது எப்படி என்பது குறித்த வீடியோவை சற்றுமுன் லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

null


இந்த வீடியோவை பார்த்தவர்கள் இதுவரை படம் பார்க்கவில்லை என்றால் உடனே படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் உள்ளது என்று கமெண்ட் பதிவாகி வருகின்றன.