×

பிரபாஸ் முன் ஹிரித்திக் ரோஷன் எல்லாம் ஒன்றுமே கிடையாது' - ராஜமவுலி பரபரப்பு பேச்சு
 

 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் பில்லா. அப்போது நடந்த இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஜமவுலி கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராஜமவுலி, 2006ல் தூம் 2 வெளியானபோது, ஹிரித்திக் ரோஷன் போன்ற ஹீரோக்கள் தென்னிந்தியாவில் ஏன் இல்லை என்று யோசித்ததாக கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், '2006-ல் தூம் 2 படத்தை பார்த்து, ஹிரித்திக் ரோஷன் போன்ற ஹீரோக்கள் தென்னிந்தியத் துறையில் ஏன் இல்லை என்று வியந்தேன். ஆனால், பில்லாவின் டிரெய்லரைப் பார்த்த பிறகு, இப்போது நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். பிரபாஸுடன் ஒப்பிடும்போது ஹிரித்திக் ரோஷன் ஒன்றுமே இல்லை. பாலிவுட்டை விட தெலுங்கு சினிமா மிகவும் சிறப்பாக உள்ளது. இப்போது நாங்கள் ஹாலிவுட் படங்களுக்குச் சமமாக இருக்கிறோம்' என்றார். இந்த பேச்சு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

சமீபத்தில், அவ்வாறு பேசியதற்கு ராஜமவுலி விளக்கம் கொடுத்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில்,'இது நான் நீண்ட காலத்திற்கு முன்பு பேசியது. சுமார் 15-16 ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். ஆம், நான் அப்படி பேசியிருக்க கூடாது, , அதை நான் ஒப்புக்கொள்கிறேன். என் நோக்கம் அவரை ஒருபோதும் தாழ்த்துவது கிடையாது. அவரை நான் மிகவும் மதிக்கிறேன்' என்றார்.