×

கூழாங்கல் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு

 

வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூழாங்கல் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக வாங்கி வெளியிட்டுள்ளார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகிக் கொண்டு இருந்தது. ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்து கொண்டு விருது பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் திரைப்படமாக கூழாங்கல் தேர்வானது.

ஆனால் ஆஸ்கர் போட்டியின் இறுதிப்பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இந்த திரைப்படம் தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது. அனைவரும் படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.