×

“சூரரைப் போற்று படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கிறேன்”… இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’சூரரைப் போற்று’ படத்தின் ட்ரைலர் நேற்று விஜயதசமி அன்று வெளியானது. ட்ரைலருக்கு ரசிகர்களிடம் இருந்து மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ட்ரைலரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது. சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். சூரரைப் போற்று படம்
 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’சூரரைப் போற்று’ படத்தின் ட்ரைலர் நேற்று விஜயதசமி அன்று வெளியானது. ட்ரைலருக்கு ரசிகர்களிடம் இருந்து மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

ட்ரைலரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது.

சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். சூரரைப் போற்று படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நவம்பர் 12-ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து சூரரைப் போற்று படத்தின் ட்ரைலரைப் பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “ட்ரைலர் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது சூர்யா சார். நவம்பர் 12-ம் தேதி வெளியாக இருக்கும் சூரரைப் பபோற்று படத்தைப் பார்த்து, மாறாவை அனுபவிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தையடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தையும் லோகேஷ் இயக்கவுள்ளார்.