கவர்ச்சி காட்டாமல் என்னால் ஜெயிக்க முடியும் : நிதி அகர்வால்..!
Jul 26, 2025, 07:00 IST
இந்தியில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை நிதி அகர்வால் தமிழில் ‘கலகத் தலைவன்’, ‘ஈஸ்வரன்’, ‘பூமி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு படமான ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தில் நடித்தமுடித்துள்ளார். இப்படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து பிரபாசுடன் இணைந்து தி ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டியில், ”நான் மாஸ் ஹீரோயின் ஆக ஆசைப்படுகிறேன். ஆனாலும் லிப்லாக் காட்சியில், நீச்சல் உடை காட்சிகளில், முகம் சுளிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன். நான் பெற்றோர்களுடன் அமர்ந்து என் படம் பார்க்க விரும்புகிறேன். நல்ல கதைகள், கேரக்டர் அமைந்தால் கவர்ச்சி காட்டாமலும் என்னால் ஜெயிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.