×

கொஞ்சம் கூட மேக் அப் இல்லாமல் இந்த வெப் தொடரில் நடித்திருக்கிறேன் - வி.ஜே. பார்வதி..!

 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் 'முத்து என்கிற காட்டான்' வெப் தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் இணையத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அதன் அறிமுக விழா சென்னை வடபழனியில் நேற்று (மார்ச் 25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், முத்துக்குமரன், ரிஷா ஜேக்கப்ஸ், வி.ஜே. பார்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில்,ஜியோ ஹாட்ஸ்டார் பிரதீப்புக்கு எனது நன்றி. மணிகண்டனுக்கும் எனக்குமான நட்பு ஒரு குறும்படம் மூலமாக ஏற்கனவே உருவானது. அவரின் அறிவு மிகவும் ஆழமானது. பெரிய சீனை கூட சாதாரண நடிகர்களை வைத்து எடுத்து விடுவார்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,"வி.ஜே. பார்வதி மீது இருக்கக் கூடிய எதிர்மறையான எண்ணங்கள் இந்த வெப் தொடரை பார்த்த பின்னர் நிச்சயம் மாறும். அவரது கதாபாத்திரம் அந்த அளவுக்கு இதில் இடம்பெற்றிருக்கிறது. அதே போல், முத்துக்குமரனின் நடிப்பு இந்த வெப் சீரிஸில் மிக சிறப்பாக இருக்கிறது. முத்துக்குமரனை இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டனிடம் அறிமுகம் செய்து வைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு திறமைசாலி" என கூறினார்.

நிகழ்ச்சியில் வி.ஜே. பார்வதி பேசுகையில்,"இந்த வெப் தொடரில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கொஞ்சம் கூட மேக் அப் இல்லாமல் இயல்பான முகத்தோற்றத்துடன் இதில் நடித்தேன். இப்படி என்னை பார்ப்பதற்கு, எனக்கே அழகாக தெரிந்தது  என்றார்.