×

இப்போ இருக்கும் நடிகைகளுக்கு கூட இல்லாத தைரியம் எனக்கு இருக்கு... நடிகை லட்சுமி ஓபன் டாக்..! 

 

தமிழில் ஒரு மூத்த நடிகை என்று பாராட்டப்பட வேண்டும் என்றால் மனோரமாவும் லட்சுமியும்தான். 

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவிலும் கதாநாயகி, அக்கா, அம்மா என்று எப்படி எத்தனை வகை பெண்கள் கதாபாத்திரங்கள் இருக்கிறதோ அந்த எல்லா கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் லட்சுமி.

அதே போல மற்ற மொழிகளிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் நடிகைகளுக்கு எல்லாம் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன.  அவர்களில் சிலர் வேற்று மொழி படங்களில் நடிக்க மாட்டார்கள்.தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார்கள் ஏனெனில் வேற்று மொழிகளில் போனால் அங்கு அந்த மாநிலத்தின் மொழி தெரியாது மேலும் அந்த மாநிலத்தில் திரைத்துறை எப்படி இருக்கிறது என்றும் தெரியாது.

தமிழ் திரைத்துறையில் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள்தான் பலரும் பல வேலைகளில் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு தைரியமாக நடிப்பதற்கு பிரச்சனை இல்லாமல் இருக்கும்.ஆனால் மற்ற துறைக்கு சென்று அங்குள்ள மொழிகளில் தெரிந்த ஆட்கள் இல்லாமல் எப்படி நடிப்பது என்கிற கேள்வி அவர்களுக்கு இருக்கும். இந்த காரணத்தினாலேயே அதிகபட்சம் வேற்று மொழிகளில் நடிக்க மாட்டார்கள் இந்த நிலையில் இந்த கேள்வியை லட்சுமியிடம் கேட்டார்கள்.

இத்தனைக்கும் லட்சுமி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார் மேலும் பாலிவட்டிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

அப்படி இருக்கும் பொழுது லட்சுமியிடம் உங்களுக்கு அதிக அட்வான்ஸ் கொடுத்து வேறு மொழி படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று கூறினால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த லட்சுமி மணிப்பூரி மொழியில் பேசி நடிக்க வேண்டும் என்று கூறினால் கூட வாங்கிய அட்வான்ஸ்க்காக நான் நடித்துக் கொடுப்பேன். ஏனெனில் ஒரு நடிகையின் வேலை அதுதான் என்று கூறியிருக்கிறார் லட்சுமி.