×

"உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் போற்றுவேன்"... ரத்தன் டாடா மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்!

 

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியா வர்த்தகத்தின் இமயமும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86), உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு, ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (அக்.9) இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா உயிரிழந்தார். இந்நிலையில் ரத்தன் டாடா மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் ரத்தன் டாடா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.