"அஜீத்தை இயக்குவது எனது ஆசைகளில் ஒன்று"-இப்படி சொன்ன இயக்குனர் யார் தெரியுமா ?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார் .அவர் அடுத்த்து அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க போவதாக கூறியுள்ளார் .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
லோகேஷ் கனகராஜ் அளித்த ஒரு நேர்காணலில், "நடிகர் அஜித் குமாரை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்?" என்ற கேள்விக்கு இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த லோகேஷ், "நடிகர் அஜித் குமாரை வைத்து கண்டிப்பாகப் படம் இயக்குவேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன" என்று உறுதியாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "அஜித் தனது கார் ரேஸ் போட்டிகளிலும், நான் எனது அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக இருப்பதால், இந்தப் படம் தொடங்குவது கொஞ்சம் தள்ளிப்போகிறது. ஆனால், நிச்சயமாக இந்தப் படம் நடக்கும். அவரை இயக்குவது எனது ஆசைகளில் ஒன்று" என்று கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜின் இந்த பதில், சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலாகி, 'AK x LOKI' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. காரணம், லோகேஷ் கனகராஜ் தனது படங்களுக்கென 'LCU' (Lokesh Cinematic Universe) என்ற ஒரு தனி உலகை உருவாக்கியுள்ளார். விக்ரம், கைதி, லியோ என LCU-வில் இணைந்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அஜித்தும் இந்த யுனிவர்ஸில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.