×

கமல், விஜய்க்கு ஓட்டுபோட மாட்டேன்- நடிகர் அரவிந்த்சாமி

 

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். நீண்ட நாட்களாக சினிமாவில் இருக்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயங்கி வரும் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதேபோன்று கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல மன்ற நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றனர். அதனால் விஜய் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக நீண்ட நாட்களாக தகவல் கசிந்து வருகிறது. 

சமீபத்தில் கூட பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதும், ஊக்கத்தொகையும் நடிகர் விஜய் வழங்கினார். இதையெல்லாம் பார்க்கும் போது விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் விஜய், தமிழக வெற்றி கழகம் என்று கட்சியை தொடங்கி இருக்கிறார். இதற்கு பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், இது குறித்து பேசிய நடிகர் அரவிந்த்சாமி, ரஜினி, கமல், விஜய் ஆகியோரை எனக்கு ஒரு ரசிகனாக பிடிக்கும். ஆனால், அதற்காக அவர்களுக்கு ஓட்டு போட மாட்டேன். ரசிகன் என்பது வேறு, அரசியல் என்பது வேறு என்று தெரிவித்துள்ளார்.