அதர்வா முரளியின் வித்தியாசமான நடிப்பில் -"இதயம் முரளி" பட விமர்சனம்
பள்ளியில் படிக்கும்போது டீச்சர் ஜோனிடா மீது கிரெஷ். டியூஷன் கிளாசில் பிரீத்தி முகுந்தனுடன் காதல். பிறகு டாக்டர் கயாடு லோஹருடன் காதல். யாரிடமும் காதல் சொன்னதில்லை. கடைசியாக அவர் பழைய காதலான பிரீத்தியை நோக்கி செல்லும்போது, காதலை சொன்னாரா என்பதே கிளைமாக்ஸ். அதர்வா முரளியின் நடிப்பு வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் தனது காதலை சொல்ல வந்து தயங்குவது, மறைந்த அவரது தந்தை நடிகர் முரளியின் படங்களை ஞாபகப்படுத்தி ரசிக்க வைக்கிறது.
அவரால் காதலிக்கப்படும் பிரீத்தி முகுந்தனும், கயாடு லோஹரும் இயல்பாக நடித்துள்ளனர். பிரீத்தி முகுந்தனின் இரட்டை வேடம் எதிர்பாராத ட்விஸ்ட். நட்டி நட்ராஜ், தமன், நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட் செல்வம், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், ‘பரிதாபங்கள்’ சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிடா, ‘ஆடுகளம்’ நரேன் சிறப்பாக நடித்துள்ளனர். கவுரவ வேடம் ஏற்றுள்ள பஹத் பாசில், சின்னி ஜெயந்த் ஆகியோர், தங்களின் இருப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.