`இடிமுழக்கம்' படத்தின் 2வது பாடல் ரிலீஸ்...!
Apr 13, 2025, 16:17 IST
சீனு ராமசாமியின் `இடிமுழக்கம்' படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'.ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.