×

நடிகர் தனுஷ் இயக்குனராக ஜெயித்துள்ளாரா ?-இட்லி கடை பட விமர்சனம் .

 

சமீபத்தில் ரிலீஸ் ஆகி திரையரங்கில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்தான் இட்லி கடை .இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கியுள்ளார் .இப்படத்த்தின் விமர் சனத்தை இப்பதிவில் நாம் காணலாம். 
நாயகன் தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்த இட்லி கடை ஊரின் அடையாளமாக இருக்கிறது. ஆனால், தனுஷுக்கு கிராமத்தில் வாழ விருப்பம் இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்கிறார்.வெளிநாட்டில் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் சத்யராஜ் மகள் ஷாலினி பாண்டேவுக்கும் தனுஷுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தனுஷின தந்தை ராஜ்கிரனும் தாய் கீதா கைலாசமும் இறக்கிறார்கள். கிராமத்திற்கு திரும்பி வரும் தனுஷ், வெளிநாட்டிற்கு செல்ல மறுக்கிறார்.மேலும் ராஜ்கிரண் நடத்தி வந்த இட்லி கடையை நடத்த முடிவு செய்கிறார்.
இவரது இந்த முடிவால், தனுஷ், ஷாலினி பாண்டே திருமணம் நின்று விடுகிறது. இதனால் கோபமடையும் ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய், கிராமத்திற்கு வந்து தனுஷுடன் சண்டை போடுகிறார். அதே சமயம் இட்லி கடைக்கு எதிரே பரோட்டா கடை நடத்தி வரும் சமுத்திரக்கனி தொழில் போட்டியால் தனுஷை ஒழிக்க நினைக்கிறார்.இது தான்  கதை 
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பா, அம்மாவை நினைத்து வருந்தும் காட்சியில் கண்கலங்க வைத்து இருக்கிறார். இட்லி கடை எப்படியாவது நடத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், தனுஷுக்கு உறுதுணையாக படம் முழுக்க பயணித்து ஸ்கோர் செய்து இருக்கிறார்.