31 ஆண்டுகள் கழித்து பாரதிராஜாவுடன் இணைந்த இளையராஜா..  ‘மார்கழி திங்கள்’ புதிய அப்டேட்  

 
ilaiyaraaja

 31 ஆண்டுகள் கழித்து பாரதிராஜாவுடன் இசையமைப்பாளர் பாரதிராஜா இணைந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா, தற்போது முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வரும் திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. இந்த படத்தை அவரது மகன் மனோஷ் இயக்கி வருகிறார். 

ilaiyaraaja

இந்த படத்தில் ஷியாம் செல்வன் மற்றும் ரக்ஷனா இந்துசூடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  இதுதவிர முழுக்க முழுக்க புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  கிராமத்து கதைக்களத்தில் அழகான காதல் கதையாக உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் சுசீந்திரன், தனது வெண்ணிலா பிரொக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார்.  

இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 31 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிராஜாவின் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.