இளையராஜா இசையமைக்கும் புது படம் -என்ன டைட்டில் தெரியுமா ?
Jul 28, 2026, 07:00 IST
ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் முதன்மைக் கதா பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘தட்டுவண்டி’. இதில் திலீபன், மேரி பென்சி குளோரியா, தங்க துரை என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை, ‘பில்டர் கோல்டு’ திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். சர்வைவல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. தற்போது பாடல் பதிவு, பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.