×

நான் எதுவும் சாதிக்கவில்லை; இசை என் உயிர்மூச்சு- இளையராஜா 

 

ஐஐடி மெட்ராஸில் இளையராஜா பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மைய தொடக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார்.

சென்னை ஐஐடி- இசைஞானி இளையராஜா இடையே ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசைக் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்று ஐஐடி வளாகத்தில் அந்த ஆராய்ச்சி மைய கட்டத்துக்கு இளையராஜா அடிக்கல் நாட்டினார். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய இசையமைப்பாளர் இளையராஜா, “இசையமைப்பது எனக்கு மூச்சு விடுவதைப் போல் இயல்பானது. நன்றாக இசையமைப்பதாக யாராவது சொன்னால் நன்றாக சுவாசிக்கிறீர்கள் என சொல்வதுபோல் உள்ளது. இசையை கற்றுக் கொள்வதற்காக கிராமத்தில் இருந்து சென்னை வந்தேன். வந்த நாளில் இருந்து இந்நாள் வரை நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. அனைவரும் நான் சாதித்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை” என்றார்.