×

இளையராஜா இசையில் ‘யார் இந்த பேய்கள்’... குழந்தைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படும் வீடியோ ! 

 

இளையராஜா இசையில் உருவாகியுள்ள ‘யார் இந்த பேய்கள்’ என்ற விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது. 

 தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக இருந்து வருபவர் கிருத்திகா உதயநிதி. அமைச்சர் உதயநிதியின் மனைவியான அவர், குறும்படங்கள், விழிப்புணர்வு படங்கள், மியூசிக் ஆல்பங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது ‘யார் இந்த பேய்கள்’ என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். 

இந்த மியூசிக் ஆல்பத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த ஆல்பம் பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். பா விஜய் எழுதியுள்ள இந்த பாடலுக்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுத்து செய்துள்ளார். இந்த மியூசிக் ஆல்பம் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. 

குழந்தைகள் சொல்வதை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கேட்கவேண்டும். அவர்களின் பிரச்சனையை தீர்க்க உறுதுணையாக இருக்கவேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து இந்த ஆல்பம் உருவாகியுள்ளது. நெஞ்சை உருக வைக்கும் இந்த மியூசிக் ஆல்பம் தவறு செய்பவர்களுக்கு ஒரு சவுக்கடியாக இருக்கும்.