"இளையராஜாவாக மாறும் தனுஷ்" - மாஸ் அப்டேட் இதோ!!
Updated: Mar 20, 2024, 13:44 IST
இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் நிலையில் இப்படத்திற்கு இளையராஜாவே இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது .
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலாவின் இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் அத்துடன் தனுஷின் 50வது படமான ராயன் ரிலீசுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.