×

லண்டனில் ஒலித்த இளையராஜாவின் முதல் சிம்பொனி... ரசிகர்கள் உற்சாகம் 
 

 

இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியை லண்டணில் அரங்கேற்றம் செய்து அசத்தினார்.

இசைஞானி இளையராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் தான் உருவாக்கிய முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சிம்பொனியை இசையை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் இசைஞானி இளையராஜா படைத்துள்ளார்.

 

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்களும், இளையராஜாவின் மகன்களுமான யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் உடனிருந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இசைஞானி இளையராஜா வெறும் 35 நாட்களில் 4க்கும் மேற்பட்ட மூமென்டுகள் கொண்ட சிம்பொனியை உருவாகியதாக கூறப்படுகிறது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.