×

கால்பந்து கிளப்பின் பக்கத்தில் நான் ரெடி பாடல்

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை  பெற்றது. நடப்பு வருடத்தில் முதல் நாளிலேயே 140 கோடி வசூலித்த முதல் திரைப்படம் லியோ என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இது மட்டுமன்றி இங்கிலாந்திலும் முதல் நாளில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ள லியோ திரைப்படம். 

இந்நிலையில், பிரீமியர் லீக் கால்பந்தில் பிரபல கால்பந்து அணியாக திகழும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் சமூக வலைதள பக்கத்தில், லியோ படத்தின் நான் ரெடிதான் பாடல் இடம் பெற்றுள்ளது.