விஜய் படத்தின் முக்கிய அறிவிப்பு..!
விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு முதல் படமாக செப்.5ஆம் தேதி வெளியான படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை வெங்கப் பிரபு இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
விஜய்யின் வில்லனிசம், த்ரிஷாவின் நடனம், சிவகார்த்திகேயனின் கேமியோ என பல்வேறு அம்சங்கள் நிறைந்திருந்தும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.126 கோடியும், இதுவரை ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘தி கோட்’ படத்தின் ஒடிடி அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் அக்.3 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதனிடையே நடிகர் விஜய் ‘தி கோட்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அ.வினோத் இயக்கத்தில் ‘தளபதி 69’படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.