×

சினேகன் - கன்னிகா வீட்டில் நடந்த முக்கிய விசேஷம்..!

 

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சினேகன்-கன்னிகா வீட்டில் முக்கிய விசேஷம் நடந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பாடலாசிரியர் சினேகன், கடந்த 2021ஆம் ஆண்டு நடிகை கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமணத்தை உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வைத்தார். இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின்னர் "தாங்கள் அப்பா-அம்மா ஆகப் போகிறோம்" என்று சினேகன்-கன்னிகா ஜோடி கடந்த மாதம் அறிவித்த நிலையில், தற்போது ஐந்தாவது மாதம் வளைகாப்பு விழா குறித்த புகைப்படங்களை பதிவு செய்தனர்.

இன்னும் ஐந்து மாதங்களில் பிறக்க இருக்கும் குழந்தையை வரவேற்க மிகவும் சிறப்பாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதும், இந்த விழாவில் இரு தரப்பினரும், உறவினர்கள், உற்றார், நண்பர்கள் உட்பட பலரும் வருகை தந்து விழாவை சிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது.