×

“நீங்க எந்த விதத்துல பாத்தீங்க” - கடுப்பான ரித்விக்கா

 

ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை இப்படம் பேசுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


இந்த நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். பின்பு படம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர். அப்போது ரித்விகாவிடம், “உங்களை ரொம்ப நாளா சினிமா துறையில் காணும், பிக் பாஸில் இருந்து வெளியில் வரமுடியவில்லையா, அல்லது பொருத்தமான கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறீங்களா என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “நான் இங்குதான் இருக்கிறேன். நீங்க ஃபாலோ பண்றீங்களான்னு தெரியல. பிக் பாஸுக்கு அப்புறம் நிறைய படங்கள் பண்ணிட்டேன். அதில் ஐந்து படங்கள் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது. அது ரிலீஸானா தானே உங்களுக்கு தெரியும்” என்றார்.

பின்பு கேள்வி கேட்டவரிடம் நீங்க பதில் சொல்லுங்க என்று கேட்ட ரித்விக்கா, “பிக் பாஸுக்கு பிறகு நான் காணும் என்று சொல்வது சரியாக இருக்காது. நான் பிக் பாஸ் முடிச்சு ஏழு வருஷம் ஆச்சு. அதுக்கபுறம் இன்ஜினியர் காலேஜ் போல நிறைய பேர் பிக் பாஸுல கலந்துகிட்டு வெளியே வந்துட்டாங்க. எல்லாரும் அவங்கங்க வேலையில கவனம் செலுத்திட்டு வராங்க. நீங்க எல்லாரையும் ஃபாலோ பண்ணா உங்களுக்கு அப்டேட் தெரியும்” என்றார். பின்பு அந்த செய்தியாளர், உங்க ஐந்து படமும் வெளியாகட்டும், அதை பார்த்து ரிவியூ கொடுக்கிறோம்” என்றார்.  


இதையடுத்து சற்று கடுப்பான ரித்விக்கா, “பிக் பாஸுக்கு அப்புறம் கடைசி உலகப் போரின் கடைசி குண்டு படம் ரிலீஸானது. அதை பாத்தீங்களா” என்றார். அதற்கு அந்த செய்தியாளர், “படத்தை பார்த்தோம். ஆனால் நீங்க வெளியே தெரியவில்லை” என பதிலளித்தார். உடனே ரித்விகா, “நீங்க எந்த விதத்துல பாத்தீங்கன்னு எனக்கு தெரியல” என முடித்துக் கொண்டார்.