×

விஜய் படத்தால் ரஜினி பட வாய்ப்பை இழந்தேன் - இந்துஜா வேதனை 

 

கடந்த 2017ஆம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் இவர், ’60 வயது மாநிறம்’,’மெர்குரி’, ‘பில்லா பாண்டி’,  ‘மகாமுனி’, ‘சூப்பர் டூப்பர்’,  ‘பூமராங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனியின் ‘காக்கி’, தனுஷின் ‘நானே வருவேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பார்க்கிங். ரசிகர்களிடையே இப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், விஜய் படத்தில் நடித்ததால், ரஜினி பட வாய்ப்பை மிஸ் பண்ணியதாக இந்துஜா வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் பிகில் படத்தில் நடித்த சமயத்தில் எனக்கு தர்பார் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. கால்ஷீட் பிரச்சனை காரணாக நடிக்க முடியாமல் போனதாக அவர் கூறியுள்ளார்.