வாளை வைத்து மிரட்டும் காஜல் அகர்வால்... தூள் கிளப்பும் வீடியோ !
‘இந்தியன் 2’ படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் களரி சண்டை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘இந்தியன் 2’. லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்களை இணைந்து தற்போது இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
விபத்து காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. திருப்பதி அருகே செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் 1920-களில் நடைபெற்றது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் களரி சண்டை பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் காஜல் அகர்வால் தீவிரமாக களரி கற்கிறார். இதற்கு முன்னர் குதிரையேற்றம் குறித்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.