×

மாஸ் காட்டும் இந்தியன் தாத்தா... பிறந்தநாளையொட்டி ஷங்கர் வெளியிட்ட போஸ்டர் !

 

 கமல் பிறந்தநாளையொட்டி ‘இந்தியன் 2’ படத்தின் புதிய போஸ்டரை ஷங்கர் வெளியிட்டுள்ளார். 

உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் தொடங்கி நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் 1920-ஆம் ஆண்டுகளில் இருப்பது போல் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. அதாவது கமல் நடிக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள் எடுக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே உலக நாயகன் கமல் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ‘இந்தியன் 2’ இந்தியன் தாத்தாவாக மிரட்டும் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். அதோடு கமலுக்கு பிறந்தநாளை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.