×

‘இந்தியன் 2’ - ல் வில்லனா எஸ்ஜே சூர்யா ?.. இணையத்தை கலக்கும் தகவல் !

 

இந்தியன் 2-ல் வில்லனாக இயக்குனர் எஸ்ஜே சூர்யா நடித்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த்,  பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகி இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கமலின் க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தில் இயக்குனரும், நடிகருமான எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது வில்லன் கதாபாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர், எஸ்ஜே சூர்யா, அவர் நடிப்பில் அடுத்து வெளியாகும் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் பொம்மை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஒரு முக்கியமான படம் ஒன்றில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். அந்த முக்கியமான படம் ‘இந்தியன் 2’ படம்தான் என கூறப்படுகிறது.