×

முடிவுக்கு வரும் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்.. ரிலீஸ் குறித்து வெளியான புதிய அப்டேட் 

 

கமலஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஷங்கர் - கமல் கூட்டணியில் சூப்பர் ஹிட்டடித்த ‘இந்தியன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2‘ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா, மனோபாலா, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முதலில் தொடங்கிய படப்பிடிப்பு சில காரணங்களால் நடுவில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் நிறைவுபெற உள்ளது. இதற்காக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதேநேரம் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.