இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
May 19, 2024, 20:20 IST
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் பாடல், வருகிற மே 22ம் தேதி வெளியாகிறது.
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகி இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள இந்தியன்-2 திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற மே-22 ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியன்-2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக கமல்ஹாசன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.