×

ஆந்திராவில் இந்தியன் 2 படப்பிடிப்பு... குவிந்த ரசிகர்கள்...

 

ஷங்கர் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் ப்ரீயட் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுள்ளது.  இந்த நடிகர் கமல்ஹாசன் 90 வயது தாத்தாவாக நடித்து வருகிறார். 

கமலின் பிறந்தநாளை ஒட்டி இந்தியன் 2 படத்தின் அறிமுக காணொலி வெளியானது. இந்த நிலையில், ஆந்திராவில் இந்தியன் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமலை காண ஏராளமான ரசிகர்கள் படையெடுத்துச் செல்கின்றனர்.