×

“இந்திய சினிமாவே... நான் வருகிறேன்...” - டேவிட் வார்னர் பதிவு...

 

தெலுங்கில் உருவாகி வரும்  ‘ராபின்ஹுட்’ படத்தின் மூலம் ஆஸ்திரேலியே கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்  நடிகராக அறிமுகமாகிறார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிலும் ரசிகர்களை வைத்துள்ளார். கோரோனா காலகட்டத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா பட வசனம் பேசி மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இந்திய ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய இடங்களில் புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து மகிழ்ந்து வந்தார்.