×

சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- த.செ ஞானவேல் கூட்டணியில் தயாராகிவரும் தலைவரின் 170 படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் கூட்டணி அமைத்துள்ள படம் ஜெய்பீம் இயக்குநரான த.செ ஞானவேல், சமீபத்தில் படத்தின் தலைப்பு குறித்த டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியது. ‘வேட்டையன்’ என அட்டகாசமாக டைட்டிலை வைத்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவல் வந்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படம் வெளியாகவுள்ளதாம். ஏப்ரல்12ஆம் தேதி படம் வெளியாகும் என கூறப்படுகிறது.  கேரளா, திருச்சி, சென்னை, திருநெல்வேலி, மும்பை உள்ளிட்ட இடங்களில்  படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.