சீரன் படத்தில் 3 கெட்டப்பில் அசத்தும் இனியா...!
Sep 30, 2024, 13:35 IST
ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் "சீரன்". சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைப்பெற்றது. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படப்புகழ் இயக்குநர் ராஜேஷ் எம், இவ்விழாவில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர். நடிகை இனியா பேசியதாவது.. சீரன் டிரெய்லர் உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.ப்படத்தில் பூங்கோதை எனும் பாத்திரத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறேன். 20 வயது பெண், இரண்டு குழந்தைகளின் அம்மா, அப்புறம் 56 வயதுப்பெண் என, மூன்று கெட்டப். உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன் என கூறினார்.