×

‘இறைவன்’ படத்தின் ‘இது போல’ லிரிக்கல் பாடல் வெளியீடு.

 

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘இறைவன்’. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியான வண்ணம் உள்ள நிலையில் தற்போது படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

 வாமனன், என்னென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் ‘இறைவன்’ படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் நயன்தாராவுடன்  இணைந்து  நரேன், விஜயலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனி ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெயம்ரவி - நயன்தாரா ஜோடி நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.  

<a href=https://youtube.com/embed/Bl3ma3KZdPY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Bl3ma3KZdPY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Idhu Pola (Tamil) | Lyrical Video | Iraivan | Jayam Ravi | Nayanthara | Yuvan Shankar Raja | I.Ahmed" width="716">

இந்த நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் ஃபஸ்ட் சிங்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘இது போல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.