ரவிதேஜா ஜனரஞ்சக நடிப்பில் அசத்தியிருக்கும் "இருமுடி கட்டு" -பட விமர்சனம்
மனைவி பிரியா பவானி சங்கர், 8 வயது மகள் நட்சத்திராவுடன் விவசாயி ரவி தேஜா எளிய வாழ்க்கை நடத்தி வருகிறார். மகள் என்றால் அவருக்கு உயிர். ஊரிலுள்ள பெண்களை மதித்து, அவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவார். ஆனால், எப்போதுமே குடித்தபடி முரட்டுத்தனமாக சண்டை போடும் அவர், மகளின் நலனுக்காக 41 நாட்கள் ஐயப்ப விரதம் இருந்து, இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை செல்வார்.
இந்நிலையில், சில பெண்களிடம் தவறு செய்தவர்களை தட்டிக்கேட்கும் ரவி தேஜா, அஜய் கோஷின் மகனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறார். அப்போது மாணவிகள் சிலர் மர்மமான முறையில் உயிரிழக்க, அதுபற்றி விசாரிக்கும் ரவி தேஜாவின் வாழ்க்கை திசை மாறுகிறது. அது என்ன என்பது மீதி கதை. ரவி தேஜாவுக்கு ‘கம்பேக்’ படமாக ‘இருமுடி கட்டு’ அமைந்துள்ளது. ஜனரஞ்சக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
கணவரை அன்புடன் கண்டிக்கும் பிரியா பவானி சங்கரை அனைவருக்கும் பிடிக்கும். அவ்வளவு சாந்தமாக நடித்து, கேரக்டரின் மூலம் காந்தமாக இழுத்துள்ளார். இன்னொரு ஹீரோ பேபி நட்சத்திரா. அவரது இயல்பான பேச்சும், நடிப்பும் கவனத்தை ஈர்க்கிறது