×

எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பதாக வெளியான செய்திகள் உண்மையா!?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்ய தயாராக இருக்கிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை முதலில் ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது. பின்னர் சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து தளபதி 65 படத்தை ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கவிருப்பதாக செய்திகள். ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தளபதி
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்ய தயாராக இருக்கிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை முதலில் ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது. பின்னர் சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து தளபதி 65 படத்தை ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கவிருப்பதாக செய்திகள். ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தளபதி 66 படத்திற்கு விஜய் எஸ்.ஜே சூர்யாவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.ஜே சூர்யா விஜய் சினிமா கேரியரில் முக்கிய படமான குஷி படத்தை இயக்கியவர். மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்திருந்தார். தற்போது தளபதி 66 படத்தை எஸ்.ஜே சூர்யா இயக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எஸ்.ஜே சூர்யா தரப்பில் விசாரித்த போது அது முழுக்க போலியான செய்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் சந்தித்தே பல மாதங்கள் ஆன நிலையில் இப்படியான செய்திகள் எப்படி பரவின என்று தெரியவில்லை என கூறப்படுகிறது.

மூன்றாவது படத்திலே நெல்சன் திலீப்குமாருக்கு விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் அவர் மீது பொறாமை கொண்ட சிலர் இவாறு பரப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.