×

‘ஜெயிலர்’ வசூலை மிஞ்சனும் – நிர்பந்திக்கப்பட்டாரா லோகேஷ்? 

 

கோலிவுட்டின் முன்னணி இயக்குநரான லோகேஷ் இயக்கத்தில் ‘லியோ’ படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ”லியோ படத்தின் வசூல் இதற்கு முன்னர் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘ஜெயிலர்’ படத்தை விட அதிகமாக இருக்க  வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்தால் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு லோகேஷ் ஓபனாக பதிலளித்துள்ளார்.

தளபதி விஜய், த்ரிஷா பல ஆண்டுகளுக்கு பின்னர் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘லியோ’ இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன் என பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சையானது. இந்த நிலையில் தற்போது லோகேஷின் நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது; அதில்,” ஹிட் படத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் கடையாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தை விட அதிக கலெக்ஷனை கொடுக்கவேண்டும் என்பது ஒரு ட்ரெண்டாக உள்ளது. அப்படி ஏதேனும் லியோ தயாரிப்பு தரப்பிலிருந்து அழுத்தத்தை சந்தித்தீர்களா?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, லோகேஷ்” ஒரு ஒரு படம் அடுத்தடுத்து வரும் படத்தின் வசூலை பீட் செய்வது இயல்பு, இதை செய்தே ஆகவேண்டும் என கட்டாயம் ஒன்றும் இல்லை, முக்கியமாக படத்தின் கான்ட்ராக்டில் அது போல எதுவும் குறிப்பிடப்படுவதில்லை, அவர்களுக்கு தேவை ஒரு ஹிட் படம் சமீபத்தில் கூட லலித் சாருடன் பேசும் போது அவர் கூறினார், ‘லோகேஷ் மீம்ஸ்லாம் பாத்தீங்களா ஜெயிலர் படத்தை விட அதிகமாக கலெக்ட் பண்ணி ஆகனும்’ அப்படின்னு சொன்னாரு நானும் ‘ பாத்தேன் சார் நீங்க கூட எனக்கு ஹெலிகாப்டர் வாங்கி தர மாதிரி மீம் பாத்தேன்’ என வேடிக்கையாக அந்த விஷயம் சென்றதாக லோகேஷ் கூறினார், மேலும் வசூல் குறித்த கட்டாயம் இன்றும் இல்லை என லோகேஷ் ஓபனாக பதிலளித்துள்ளார்.