×

இசைஞானி இளையராஜாவின்  சிம்பொனி நேரடி நிகழ்ச்சி அப்டேட் 

 

நான்கு தசாப்தங்களுக்கு மேல் திரைத்துறையில் பணியாற்றி வரும் இளையராஜா, கடைசியாக தமிழில் வெளியான ஜமா திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதையடுத்து விடுதலை 2 படத்தில் பணியாற்றி வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தவிர்த்து தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு படங்களை கைவசம் வைத்துள்ளார்.