×

இவன் தந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் -ஹீரோ யார் தெரியுமா ?

 
இப்போது வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது .இன்னும் சிலர் வியாபார ரீதியாக வெற்றி பெற மூன்றாம் பாகம் கூட எடுக்கின்றனர் .அரண்மனை படம் பல பாகங்களாக அதன் இயக்குனர் சுந்தர் சி யால் எடுக்கப்பட்டது .அதே போல் தில்லுக்கு துட்டு படமும் சந்தானம் நடிப்பில் பல பாகங்களாக வெளி வந்தது .அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற இவன் தந்திரன் படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்படுகிறது. 
‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கண்ணன், ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ என்ற ஹாரர் படத்தைத் தயாரித்து, இயக்கி இருக்கிறார். இந்தப் படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. 2017-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘இவன் தந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ‘இவன் தந்திரன்-2’ என்கிற பெயரில் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்குகிறார் கண்ணன். ‘கே.ஜி.எஃப்’ சரண் நாயகனாக நடிக்கிறார். சஷாங்க் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். சிந்து பிரியா, சமுத்திரக்கனி. தம்பி ராமையா, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் பாடல்களை சிவா ஆனந்த் எழுதுகிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.