×

ஜெ பேபி படத்திற்கு யு சான்றிதழ்

 

 பா.ரஞ்சித்தின் நீலம் பிரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெ. பேபி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த சுரேஷ் மாரி இப்படத்தை இயக்கியுள்ளார். அட்டகத்தி தினேஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  தினேஷுன் இணைந்து ஊர்வசி மற்றும் மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டோனி பிரிட்டோ இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஒரு தாய் மற்றும் இருமகன்களை வைத்து உருவாகி வரும் கதை என்றும், இதில் சென்டிமென்ட் மற்றும் காமெடி கலாட்டா இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

ந்த படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு யு சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கி உள்ளது.