×

ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து  நடித்துள்ள ‘தீராக்காதல்’.. டிரெய்லர் வெளியீடு !

 

ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘தீராக் காதல்‘ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த படத்தில் முதல்முறையாக நடிகர் ஜெய் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.  ரொமான்டிக் டிராமா வகையில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த படத்தின் இரண்டாவது கதாநாயகியாக ஷிவதா நடித்துள்ளார். இவர்களுடன் பேரி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவி வர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். மூன்று பேரை சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.  

தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/l7V4Q_dXY_c?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/l7V4Q_dXY_c/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">