ஜெயிலர்- 2 படத்தின் அப்டேட் இன்று வெளியாகுமா?
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 ஆம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டனர்.
ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 1 வருடம் முடிவடைந்த நிலையில். இரண்டாம் பாகம் குறித்து இன்று அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு `ஹுகும்' என்ற தலைப்பு வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. படத்தில் மோகன் லால், சிவா ராஜ்குமார், யோகி பாபு மற்றும் பல இந்தி மற்றும் தமிழ் நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.