×

இயக்குநர் நெல்சனுக்கு பரிசு கொடுத்த ‘ஜெய்லர்’ பட நடிகர் – வைரல் புகைப்படம்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் நெல்சன், ஜெய்லர்  படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த நிலையில் அந்த படத்தின் முக்கிய நடிகர் ஒருவர் நெல்சனிற்கு அசத்தல் பரிசு ஒன்றை வழங்கி ஆச்சரிய பட வைத்துள்ளார்.

நடிகை ரம்யாகிருஷ்ணன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்,  பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரீஃப், நடிகர் சுனில், தமன்னா என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் நடித்துவரும் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷ்ரோப் இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த தகவலை  நன்றி தெரிவித்து புகைப்படத்துடன் தனது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார், நெல்சன் திலீப் குமார்.