×

5 நொடிதான்.. விற்று தீர்ந்த ஜெயிலர் டிக்கெட்..  சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா..!

 

‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் டிக்கெட் 15 நொடியில் விற்று தீர்ந்துள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் மாஸ் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’. இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆயிரம் டிக்கெட்டுகளை இலவசமாக கொடுப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. அதன்படி ஆயிரம் டிக்கெட் இன்று இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில்  15 நொடிகளில் இந்த டிக்கெட் விற்று தீர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‌இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.