தெறிக்கவிடும் ‘ஜெயிலர்’!- 5வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்.
‘ஜெயிலர்’ படம் வெளியாகி 5 நாட்களாகும் நிலையில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து வெளியான சூப்பர் ஸ்டாரின் படம் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் வேறலெவல் ஹிட். தொடர்ந்து படம் கடந்த 10ஆம் தேதி ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியானது. இன்றுவரை உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லக ஓடி வருகிறது. இந்த நிலையில் படம் வெளியாகி 5நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
படம் வெளியான முதல் நாளில் 100 கோடியை வசூலித்த ஜெயிலர் 5வது நாளில் 350கோடியை கடந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் விரைவில் படம் 500 கோடி கிளப்பில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.